சொல்வேனே சொல்வேனே,
என் காதலை சொல்வேனே.
வாழ்வேனே வாழ்வேனே,
உந்தன் இதயத்தில் வாழ்வேனே
பித்தனாகி போனேனே எதற்காக,
காதல் கொண்டேன் உன்மீது அதற்காக.
என் மனதை கொள்ளை கொண்டாய்,
என் இதயத்தை வசியம் செய்தாய்,
உன்னோடு நான்,
என்னோடு நீ,
இதுதான் காதலா சொல் அன்பே.
நம் முதலாம் சந்திப்பு,
உறவில் கொஞ்சம் தித்திப்பு.
நீ போட்ட என் ஆடை,
அதில் காட்டினாய் காதல் சாடை.
உன்னை கண்ட நாள் முதல் என் இதயம் என்னிடமில்லை,
படுக்கையிலே உன் நினைப்பாக இருக்க தூக்கம் வரவில்லை.
காதல் நோய் கண்ட எனக்கு சிகிச்சை செய்ய வருவாயா?
காதல் பாடத்தை எனக்கு சொல்லித்தர வருவாயா?
நம் இருவரின் உறவு,
திறக்கப்பட்ட மனதின் கதவு.
என்றுமே இருக்காது பிரிவு,
என் தேவைக்கு நீ உதவு.
அருகில் நீ இருந்தாலே நெஞ்சில் தவிப்பு அடங்கவில்லை,
தூர விலகி சென்றாலே என்மீது உனக்கு கருணை இல்லை.
ஈருடல் ஓர் உயிராய் இருக்க எனக்கு சம்மதம் தருவாயா?
காதல் தேசத்தை உருவாக்க முயற்சிகள் செய்வாயா?