திங்கள், 13 ஏப்ரல், 2009

Oru Kadhalanin Mudhal Paarvaiyil...

என்ன ஆனதோ இன்று எனக்கு?
இதயம் குழம்பியதே எதற்கு?
பூ மாலை போல ஜொலிக்கும் மேகம்,
பனித்துளி போல மழை பொழியும்,
என்னவள் அழகை பார்க்கும் போது,
ஏன் நானும் வேர்க்கிறேன் அப்போது?
எவரின் கை வண்ணத்தில் உருவான சிற்பம்,
அவளின் எழில் எனக்கு புதிய சாபம்,
அவளின் அழகு கண்களை மறைக்கும்,
புது வினோத உற்சாகம் எனை சூழும்,
மறக்க முடியாத இன்ப மாயம்,
கொட்டும் மழையில் எடுக்கிறதே தாகம்.

பாமழை பொழியும் பூமியில்,
ஒரு வானவில் தோன்றியதே.
என்னவள் எழிலை பார்க்கும் போது,
தன் எழிலை இழந்து போனதே.
அவள் அழகு எனை காந்தம் போல,
அவள் அருகில் ஈர்த்து சென்றதே.
அன்று முதல் எந்தன் கால்களும்,
அவளை நோக்கி நடை போட்டதே.
ஒரு மாலை வெயில் எனை காண,
இரவில் என் முன்னே தோன்றுதே.
கண்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க,
மழைத்துளிகள் என்னை நனைத்து ஆட,
இதயத்தில் இசையுடன் பாடல் ஒலிக்க,
உடலும் சேர்ந்து ஆட.

அவள் அழகை காணும் போது,
நான் தூக்கமின்றி வாடி போனேன்.
அவள் என்னை கண்டுக்கொண்ட போது,
நான் வெட்கத்தால் தாங்க முடியாமல் போனேன்.
கள்ளங் கபடமற்ற புன்னகையால்,
என்னை சூடேற்றி போனாளே.
அவளின் சுண்டி இழுக்கும் இடையின் வளைவுகளால்,
தேய்பிறையும் குறை கூறியதே.
கனா கண்டதுபோல் நானும் நின்றேன்,
கனவு பலித்ததால் உலகை மறந்தேன்,
முதல் முதலாய் மின்னலை ரசித்தேன்,
கடலில் தோன்றும் பெரிய அலைபோல்,
அவளிடம் விரைந்து சென்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக