உன்னை சந்திக்கும் முன்,
கானா, குத்து, Rap Songs எனது I-Pod’ல் ஒலிக்கும்,
என் சிந்தனைக்கு உற்சாகம் கொடுக்கும்...
உன்னை கண்ட பின்,
Love, Feeling Songs எனது Apple Laptop’ல் ஒலிக்கும்,
என் செவிகளுக்கு விருந்து கொடுக்கும்...
ஆனால் இப்போ,
உந்தன் பிரிவுக்கு பின்,
Sentimental, Sad Songs எனது I-Phone'ல் ஒலிக்கிறது,
மனதிற்கு ஆறுதல் கொடுக்கிறது...
அயல் நாட்டில் கொடி கட்டும், தமிழ் மறவாத மலேசியா பெண்ணே...
குமரியாக இருந்தும் குழந்தை,
குணம் கொண்ட முட்டை கண்ணே...
குரல் கேளாமல் பேசிய நங்கையே,
இணையம் வழியாக தெரிந்த மங்கையே,
சுகம்தான்...
உனக்காக...
என் ஆசைகள் சிலவற்றை மறைப்பதும்
சுகம்தான்...
பிடிக்காது எனினும் நீ செய்துவிட்டதால்
சகித்திருப்பதும் சுகம்தான்...
தன்மானம் துறந்து தவறு என் பக்கம்
இல்லையென்றாலும் உன்னிடம்
மன்னிப்புக்கோருவதும் சுகம்தான்...
நீ எனக்கானவள்!
என்பது
உண்மையாய் இருக்கும் வரை...
மட்டுமல்ல..,
"பொய்யாக போனாலும்"