ஞாயிறு, 8 மார்ச், 2009

Manathai Thotta Paadal Varigal...

வாத்தியார் சொல்லும் பாடம் பாதியிலே மறந்தே போகும், வாழ்கை சொல்லும் பாடம் மட்டும் மறக்காதே. (சிநேகிதியே)

காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பது அறியாது, உன் பளிங்கு முகத்தை பார்க்கா சொன்னால் பசியோ வலியோ தெரியாது. (ரட்சகன்)

ரவி வர்மன் தூரிகை எழுத்தோ, வெண் சங்கில் ஊறிய கழுத்தோ, அதில் ஒற்றை வேர்வை துளியாய், நான் உருண்டிடமாட்டேனோ? (ஆனந்த பூங்காற்றே)

பெண்ணின் காதல் வழியில் இன்பம், ஆணின் காதல் பிறவி துன்பம். (இதய திருடன்)

கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி? (கவிக்குயில்)

பொன்னிலே பூவை அல்லும் புன்னகை மின்னுதே, கண்ணிலே காந்தம் வைத்த கவிதையை பாடுதே. (தம்பிக்கு எந்த ஊரு?)

லட்சம் பல லட்சம் என்று தாய் மொழியில் சொல்லி இருக்க, ஒற்றை சொல் சிக்கவில்லை எதனாலே? பந்தி வைத்த வீட்டுக்காரி பாத்திரத்தை கழுவி விட்டு, பட்டினியாக கிடப்பாளே அதுபோல. (டிஷ்யூம்)

வேண்டாம் என்றாலும், விலகி போய்தான் நின்றாலும், காதல் விடுவதில்லை. (லேசா லேசா)

தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை,தேடி பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே. (ஜெ ஜெ)

வார்த்தையடி பார்க்கும் போது காதல் வரவில்லை, காதல் வந்து சேர்ந்த போது வார்த்தை வரவில்லை. (பூமகள் ஊர்வலம்)

கால்கள் இல்லாமலே காற்று நடைபோடலாம், நீயும் இல்லாமலே நாட்கள் நடைபோடுமா? (முகவரி)

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம், தண்ணீர் கரையில் முடிக்கிறோம். (ரிதம்)

கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன், உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன். (மே மாதம்)

முள்ளோடுதான் முத்தங்களா? சொல் சொல் (ரோஜா)

இருதயமே துடிக்கிறதா? துடிப்பதுபோல் நடிக்கிறதா? (அழகிய தீயே)

நெஞ்சை பூபோல் கொயிதுவிட்டால். (மின்னலே)

கோடை மான் விழி அம்புகள் மார்பை துளைத்ததென்ன? (இருவர்)

இந்த உலகத்தில் எவனுமே ராமர் இல்லையே. (உன்னாலே உன்னாலே)

இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க, எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க, தொடட்டும்மா தொல்லை நீங்க? (மின்சார கனவு)

நெஞ்சில் ஒரு காதல் வலி, பூவில் ஒரு சூறாவளி. (வசூல் ராஜா MBBS)

அந்த வானம் அழுதான் இந்த பூமியே சிரிக்கும், வானம்போல் சில பேர் கொண்ட வாழ்கையும் இருக்கும், உணர்ந்தேன் நான். (அபூர்வ சகோதரர்கள்)

அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே, அளந்து பார்க்க பல விழி இல்லையே, என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே, மறந்து போ என் மனமே. (மின்னலே)

காதல் இருக்கும் பயத்தினில்தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை, மீறி அவன் பூமி வந்தால் தாடியுடன்தான் அலைவான் வீதியிலே. (தினா)

கவிதை பாடின கண்கள், காதல் பேசிய கைகள், கடைசியில் எல்லாம் பொய்கள், இந்த பிஞ்சு நெஞ்சு தாங்குமா? (யூத்)

கண்கள் உள்ளவரை காதல் அழிவதில்லை, பெண்கள் உள்ளவரை ஆண்கள் ஜெயிப்பதில்லை. (மௌனம் பேசியதே)

எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லையே. (உன்னாலே உன்னாலே)

தந்தை அன்பு அது பிறக்கும் வரை, தாயின் அன்பு அது வளரும் வரை, தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ, உயிரோடு வாழும் வரை. (மன்மதன்)

காதல் காயம் நேரும் போது தூக்கம் இங்கு எது? (மின்னலே)

வெண்ணிலவின் தேகம் மூடும் மேகம் விலகுமா? வண்ண உடல் யாவும் காணும் யோகம் வாய்க்குமா? (தொட்டால் பூ மலரும்)

ஒரு ரோஜா என்னை பறித்தது காதல் என்று, ஒரு கங்கை என்னை குடித்தது தாகம் என்று. (பூவெல்லாம் கேட்டுப்பார்)

தெய்வம் பூமிக்கு வருவதில்லை, தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தார், தாயும் இங்கு எனக்கு இல்லை, எனக்கொரு தாய் அவர் உன்னுருவில் தந்துவிட்டார்.(காதலில் விழுந்தேன்)

காதல் என்னை கேட்க்கவில்லை, கேட்டால் அது காதல் இல்லை. (வாரணம் ஆயிரம்)

கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல்தான். (தசவதாரம்)

ஆதி அந்தமும் மறந்து உன் அருகில் கரைந்து நான் போனேன், ஆண்கள் வெட்கப்படும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டுகொண்டேன். (யாரடி நீ மோகினி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக