ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

வாழ்க்கையில் வசதியாய் வாழ வேண்டி
வசந்த பயணம் நானும் செய்தேன்...

பிறந்த காலம் முதல் - நான்
பிரிந்ததில்லை என் தாய் தந்தையை
சிறந்து வாழ வேண்டுமானால் - பிரிவை
மறந்து தானே இருக்க வேண்டும்...

(ஒரு கவிஞரின் படைப்பில் படித்தது; அனுபவித்து கொண்டிருப்பது)

ஞாயிறு, 13 மே, 2012

Drunker's Poem

குடிகாரனின் கவிதை...

சரக்கை உறிஞ்சினேன்,
சர்ரென்று அழிந்தன,
அவளின் நினைவுகள்...

Happy Married Life Sneha

ஆண்களுக்கான துக்க தினம்,
புன்னகை இளவரசியின் திருமணம்,
வாழ்த்தி பாட சொல்லுதே என் மனம்,
"எங்கிருந்தாலும் வாழ்க" என்று ஒரு கணம்...

Movie Jokes

"அந்த திரைக்கதாசிரியர் தன் பையனை ஏன் திட்டுறாரு?"

"பரிட்சை சரியா எழுதாம, வீட்டுக்கு வந்து, 'பரிட்சையில் சொதப்புவது எப்படி?'னு திரைக்கதை எழுதிக்கிட்டிருக்கிறானாம்!"

Tamil Jokes

"நாம பார்க்கப் போறதா இருந்த பொண்ணு ஓடிப் போயிட்டளாம்!"

"பஜ்ஜி போச்சே!"

Happy

நெடுநாளாய் தேடிய பொருள் கண்ணில் பட்டதால் முகத்தில் பூக்கள் !
பேரம் பேசாமல் வாங்கியதால் விற்றவள் முகத்திலும் பூக்கள் !

வியாழன், 19 ஏப்ரல், 2012

Pleasure

காத்திருக்கிறேன்
விடியலுக்காக
ஏட்டில்
மட்டுமல்ல
வாழ்விலும்
வசந்தம்
வரட்டும்
என்பதற்காக!!!

Name

உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும் வரை
நான் உணர்ந்ததில்லை
எனது பெயர்
இத்தனை அழகாய்
இருக்கிறது என்று...

Prize For Love

நாளிதழில் செய்தி !!
காதலித்தற்காக கிடைத்த பரிசுகள்...
காதலித்தவனுக்கு கிடைத்தது,
அரிவாள் வெட்டு...!
சமரசம் செய்தவனுக்கு,
மண்டை பிளந்தது...!

Blue

நீலம் காமமாக தோன்றவில்லை,
கவிதையாக தோன்றுகிறது...
உனது நீலப்புடவையின்,
தரிசனம் கண்டு...

Language

அன்று,
எனது காதலுக்காக,
உனது தாய் மொழியை கற்றேன்...
இன்று,
உனது தாய் மொழி,
எனது நாவில் உண்டு...
எனது காதல்,
உனது இதயத்தில் இல்லை...

வியாழன், 15 மார்ச், 2012

English Movies if translated in Tamil


English Movies if translated in Tamil...

Mummy Returns: Aatha Thirumbi Vanthuttaa/ஆத்தா திரும்பி வந்துட்டா
Wanted: Vendiyathu/வேண்டியது
Batman Begins: Vavvaal Manithanin Aarambam/வௌவால் மனிதனின் ஆரம்பம்
Catwoman: Pen Poonai/பெண் பூனை
Lord of the Rings: Mothiranggalin Kadavul/மோதிரங்களின் கடவுள்
The Scorpion King: Thel Raja/தேள் ராஜா
Ice Age: Panikkatti Vayasu/பனிக்கட்டி வயசு
Ghost Hunters: Pei Vettaiyar/பேய் வேட்டையர் 
Johnny English: Aanggila Johnny/ஆங்கில ஜானி
Finding Nemo: Nemo'vai Thedi/நீமோ'வை தேடி
Die Another Day: Innoru Naal Saavu/இன்னொரு நாள் சாவு
The Day After Tommorrow: Naalai Maru Naal/நாளை மறு நாள்
Hellboy: Naraga Paiyan/நரக பையன்
Ghost Rider: Pei Ottunar/பேய் ஓட்டுநர்
Resident Evil: Theeya Kudil/தீய குடில்
X-Men: X-Aambalaigal/X-ஆம்பளைகள்
Exorcism of Emily Rose: Emily Roja'kku Pei Otta/எமிலி ரோஜாக்கு பேய் ஓட்ட 

Taj Mahal Message


தாஜ்மஹால் சொல்லும் Message என்ன?
செத்தும் செலவு வைப்பாள் காதலி!

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

Bharathi

பாரதியார் 

போராட்டங்களைப்
புதிது புதிதாய்
செய்து காட்டிய
புரட்சிக்குப்
பாராட்டுத்
தெரிவித்தோர்
.
.
.
.
.
பன்னிரெண்டு பேர்... 

Hitler

ஹிட்லர்

உலகையே
ஆளயெண்ணி
அனாதையாய்
செத்துப்போன
கொடுங்கோல்
சுயநலக்காரன்!  

Gandhi

மகாத்மா 

அஹிம்சா 
ஞானத்தை 
உலகிற்கு
அறிமுகம்
செய்ததற்குக்
கிடைத்த பரிசு
.
.
.
.
.
இரு தோட்டாக்கள்!

திங்கள், 13 பிப்ரவரி, 2012

Leaking The Love

உன்னை கண்ட பின்,
என் பேனா கூட,
காதலை மட்டும் கசிகிறது...
மையின் வடிவமாக...

Poverty Ver. 2

மனைவி உயிருடன் இருக்க,
அடகு செய்யப்பட்டது,
கணவனால் கணவனின் உயிர்,
தாலி வடிவில்...

Poverty

கட்டியவன் உயிருடன் இருக்க,
அமைதியாக உறங்குகிறது அடகு கடையில்,
மனைவியின் தாலி...

In Your Look

பனியில் நனைந்த
தட்டான் கூட
பறப்பதில்லை...
நான் மட்டும்
எப்படி பறக்கிறேன்?
உன் பார்வையில்
நனைந்தும்!

Water Service

அழுக்கடைந்த பூமிக்கு
Water Service!
மழை!!

Joke Story

‎One day a காக்கா & கொக்கு fly in the வானம்.
At that நேரம் the கொக்கு fell down in a கடல்.
After that the காக்கா give its கை & touch the கொக்கு's கை.
Suddenly the கொக்கு sang the பாட்டு "கறுப்பான கையால என்ன புடிச்சான்."
Then காதல் starts between them. 

But காக்கா's குடும்பம் reject கொக்கு because of its வெள்ளை colour. 
So கொக்கு always stand with one கால் in hot வெயில் to become கறுப்பு.
What a fantastic love story...!!! 

Joke

கவுண்டர்: உங்க ஊரு ஏதுடா?
செந்தில்: கருப்பட்டி !
கவுண்டர்: உங்க அப்பன் பேரு?
செந்தில்: சீனி!
கவுண்டர்: உங்க ஆத்தா பேரு?
செந்தில்: சக்கர!
கவுண்டர்: உன் பேரு?
செந்தில்: தேனப்பன் !
கவுண்டர்: ஒருநாள் உன் குடும்பம் நாய் நக்கியே சாவபோது பாரு!!!

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

Sleeping In My Death

என்னவள் என்னை வேண்டாம் என்று சொன்னால்,
நான் கவலைப்படமாட்டேன்,
தாடி வளர்க்கமாட்டேன்,
மது அருந்தமாட்டேன்,
ஆனால்,
உன்னினைவுகளுடன் நான்,
உறங்கி கொண்டிருப்பேன்...
அமைதியாக என் கல்லறையில்...

Your Name


தண்ணீரிலும் எழுத ஆசைப்பட்டேன்
உன் பெயரை அன்று !!!
உன்னினைவுகளுடன் நான்
எழுதிக்கொண்டிருக்கிறேன் 
கண்ணீரால்
உன் பெயரை இன்று ...

Sub Title

சில சிக்கலான நேரங்களில், 'சில மணி நேரங்களுக்கு பிறகு'னு, 
சில சிக்கலான நாட்களில், 'சில நாட்களுக்கு பிறகு'னு 
Sub Title போட்டு நேரமும் நாட்களும் நகராதான்னு தோணுது...

Anger

என் கோபம் கூட உன் மேல் காதல் கொள்வதால் என்னவோ?
என் கோபம் உன்மீது காட்ட தயங்குகிறது...

புதன், 18 ஜனவரி, 2012

Joke

நண்பன் 1: 'திருப்பாச்சி'க்கும் 'வேலாயுத'த்க்கும் என்ன வித்தியாசம்?

நண்பன் 2: கறுப்பு தங்கச்சி'னா 'திருப்பாச்சி', சிவப்பு தங்கச்சி'னா 'வேலாயுதம்'

Heart Touching Song - Enthan Kan Munne - Nanban

எந்தன் கண் முன்னே 
கண் முன்னே
காணாமல் போனேனே
யாரும் பார்க்காத விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே

இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா !! இதையா!! எதிர்ப்
பார்த்தேன்  

மழை கேட்கிறேன், எனை  எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன் விழிகளை பறிக்கிறாய்
கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா ?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
உறங்கிட விடுவாயா?




Joke from Nanban film

Examல, நம்ம pass பண்ணிட்டு நம்ம friend fail ஆனா... "வெந்து NOODLES ஆயிடுவோம்"

But, அதே examல namma fail பண்ணிட்டு நம்ம friend pass பண்ணிட்டு first வந்துட்டனா... "நொந்து NOODLES ஆயிடுவோம்"

திங்கள், 16 ஜனவரி, 2012

Weather

பூமத்திய ரேகையில் எதுவும் நடவாது என்று கூறியது விஞ்ஞானம் அன்று...
ஆனால்,
"2012" அறிகுறியின் படி எங்கும் எதுவும் நடக்கலாம் என்று பூமியின் பருவ நிலை  காட்டுகிறது இன்று...

திங்கள், 9 ஜனவரி, 2012

Joke

தனுஷ்: அடி வெள்ளாவி வெச்சுதான் வெளுத்தாங்களா? இல்ல வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா?

தாப்சி: உன்ன சாப்பாடு போடாம 
வளர்த்தாங்களா? இல்ல, சாப்பாடே காட்டாம வளர்த்தாங்களா?

Just A Miss


கஷ்டப்பட்டு மின்னஞ்சல் அரட்டையில்,
சிக்கிய பெண்...
"Hello Uncle!!!" என்றாள்...