சனி, 21 பிப்ரவரி, 2009

Vaarai…

வாராய்,
நெஞ்சில் தீயாய் வாராய்,
தேன் அமுதமாய் வாராய்,
அருகில் நெருங்கி வாராய்,
புரிந்து கொண்டேனே.
வாராய்,
காதல் தாகமாய் வாராய்,
காதல் புயலாய் வாராய்,
காதல் மழையாய் வாராய்,
கண்டு கொண்டேனே.
பூவாய் மலர்ந்தாயே என் மனதில் சூடவா?

வாராய்,
பனித்துளியாய் வாராய்,
பூ வடிவமாய் வாராய்,
பௌர்ணமி நிலவாய் வாராய்,
தெரிந்து கொண்டேனே.
வாராய்,
தோழியாக வாராய்,
மனைவியாக வாராய்,
தேவதையாக வாராய்,
காதல் கொண்டேனே.
காற்றாய் புகுந்தாயே என்னுள் உன்னை சுவாசிக்கவா?

ஒரு நட்பு ஏற்பட ஆயிரம் காரணங்கள் உண்டு,
ஒருவன் காதல் வயப்பட எந்த காரணங்களும் இல்லை,
உணர்த்து கொண்டேன் நம் முதல் சந்திப்பிலே.
காதலில் விழுந்ததில் ஒரு வித மயக்கம்,
வார்த்தைகளால் கூற முடியாத ஒரு வித தயக்கம்,
அறிந்து கொண்டேன் நம் நேசத்திலே.
தேவதையாய் ஒளிர்ந்தாயே உன்னை நான் வணங்கவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக