வியாழன், 15 டிசம்பர், 2011

Joke

சிம்பு: ஒரு வானம் போல மனம் படச்ச மன்மதன், சிலம்பாட்டத்தில் ஒரு வல்லவன், கட்டுங்கடங்காத ஒரு காளை, கல்யாணம் கட்டிகிறத்துக்கு விண்ணைத்தாண்டி வருவாயான்னு கூப்ட்டா கூட இந்த மன்ன தாண்டி வரமாட்டிங்கிறையே எம் புள்ள...!!


சந்தானம்: ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு feelings... ஆனா உனக்கு over feelings மச்சி!! வருவா ஆனா வரமாட்டா...!!

புதன், 14 டிசம்பர், 2011

Baby's Feeling

அவளை பார்க்கும்போது சொல்ல நினைக்கிறேன், 
அவள் சிரிக்கும்போது சொல்ல நினைக்கிறேன், 
அவள் என்னை முத்தம் இடும்போது 
சொல்ல நினைக்கிறேன், - ஆனால் 
சொல்ல முடியவில்லை...
கடவுளே எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியை கொடு, 
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


அவளை அம்மா என்று அழைக்க, 
"The feeling of three month old BABY!!"

Lucky Draw

வேண்டும் என்பவனுக்கு கிட்டியதில்லை,
வேண்டாதவனுக்கு கிட்டியும் பயனில்லை,
அதிர்ஷ்ட குலுக்கல்...

ஞாயிறு, 20 நவம்பர், 2011

Joke

முதல் நபர்: அஜித்குமாருக்கும் எம் பையனுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கு.

இரண்டாம் நபர்: அது என்ன சின்ன வித்தியாசம்?

முதல் நபர்: அவர் தல, எம் பையன் ஒரு தறுதல!!!

வியாழன், 10 நவம்பர், 2011

Heart Beat


நீ என்னிடம் பேசியதை விட,
என் இதயத்திடம் பேசியதே அதிகம்...
அதனால்தான் என்னவோ என்னை விட,
என் இதயம் அதிகம் துடிக்கிறது உனக்காக...

True Affection


உண்மையான நேசம் இருந்தால்,
வார்த்தைகள் தேவை இல்லை,
நினைவுகள் கூட பேசும்...!

Your Eyes

எத்தனைப் பெண்கள் என்னைப் பார்த்தாலென்ன எந்தப் பெண்ணுக்கும் உன்னுடைய கண்கள் இல்லையே... அதைத்தவிர வேறு எந்த கண்களுக்கும் நான் மயங்கவில்லையே...

Feelings

ஏழாம் அறிவு வெண்திரையில் பார்க்கையில்,
உனது பிம்பங்கள் வெண்திரையில் கடந்து போகையில்,
எனது ஆறாம் அறிவுக்கு இனம் புரியாத அதிர்ச்சி...
கூடவே மகிழ்ச்சி...
கதாநாயகி உருவில் நீ,
ஆனால் பொறாமை தோன்றியது,
காரணம் உன்னருகில் அக்கதாநாயகன்...
ஐந்தறிவு ஜீவனுக்கு வில்லன் செலுத்திய கிருமியை,
கதாநாயகனுக்கு செலுத்தலாம் என்று தோன்றுகிறதே...

Women


புரிந்து கொள்ள கடினமான வரிகள்,
கவிதைகள்...
புரிந்து கொள்ளவே முடியாத கவிதைகள்,
பெண்கள்...

சனி, 22 அக்டோபர், 2011

Sleepless

இரவுகள் என்னை உறங்க வைத்தாலும்,
அவளின் குறும்புகள் என்னை உறங்க விடுவதில்லை... 

Comedy Poem

அருகம்புல் போல என் காதல் வளர்ந்து கொண்டிருக்கும் போது,
அவள் அப்பன் எருமை மாடு போல மேய்ந்து விட்டான்...

God

உலகில் எத்தனை
கடவுள்
இருந்தாலும் …!!!

உன்னை எனக்கு
“ராட்ஷசி” ஆகா
தந்த …

உன் “அன்னை”யும்
எனக்கு ஒரு
கடவுள் தான்…!!!

Happy Birthday


ஒளிக்கை நீட்டி வாழ்க்கை,
 காட்டிய வசந்த நாள்,
நீ பிறந்த நாள்...
மெய்யாக இந்நாள்,
உன் பிறந்த நாள் அல்ல,
இந்த பூமிக்கு ஒரு தேவதை,
வந்த இனிய நாள்...
ஆனால் எனக்கு மட்டும் ஏனடா... 
இன்னும் நீ குழந்தையாகவே தெரிகின்றாய்...
உனது ஜனனம், 
உன் பெற்றோருக்கு மகிழ்ச்சி பொங்கும் தருணம்,
மனதில் குதூகலம்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
எனது அன்புக்குரிய அழகான ராட்ஷசி...
மென்மேலும் இன்பம் பெருகட்டும்...
உனது சுட்டித்தனம் தொடரட்டும்...

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

Songs

உன்னை சந்திக்கும் முன்,
கானா, குத்து, Rap Songs எனது I-Pod’ல் ஒலிக்கும்,
என் சிந்தனைக்கு உற்சாகம் கொடுக்கும்...
உன்னை கண்ட பின்,
Love, Feeling Songs எனது Apple Laptop’ல் ஒலிக்கும்,
என் செவிகளுக்கு விருந்து கொடுக்கும்...
ஆனால் இப்போ
,
உந்தன் பிரிவுக்கு பின்,
Sentimental, Sad Songs எனது I-Phone'ல் ஒலிக்கிறது,
மனதிற்கு ஆறுதல் கொடுக்கிறது...

Heaven

சொர்க்கம் என்னுமிடத்தில்,
நான் உன்னைச் சந்திக்காவிட்டால்...
அந்த இடம்,
சொர்க்கமாக இருக்க முடியாது...
நான் கண்ட,
அந்த சொர்க்கம்,
இந்த முகப்புத்தகம்... 

I Don't Know

கவிதை தெரியாது எனக்கு...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அழகிய மலையாள மகளே...
தமிழ் பேசி வாயடிக்கும் ஓவியமே...
உன்னை தவிர, 
வேறு கவிதை தெரியாது எனக்கு...

Good Night

அயல் நாட்டில் கொடி கட்டும்,
தமிழ் மறவாத மலேசியா பெண்ணே...
குமரியாக இருந்தும் குழந்தை,
குணம் கொண்ட முட்டை கண்ணே...
குரல் கேளாமல் பேசிய நங்கையே,
இணையம் வழியாக தெரிந்த மங்கையே,

இனிய இரவு வணக்கம்... 
நாளைய பொழுது இனிதே கழியட்டும்...

Expectations

உண்மையான காதலில் எதிர்ப்பார்ப்புகள் கிடையாது...
நான் அவளை காதலிப்பேன் என்று நான் எதிர்ப்பார்க்கவும் இல்லை...
அவள் என்னை மட்டும்தான் காதலிக்க வேண்டும் என்று கூட நான் எதிர்ப்பார்க்கவில்லை...

Pleasure

உன்னிடம் தோற்று போவதும்
சுகம்தான்...
உன்னால் கடிந்து கொள்ளப்படுவதும்
சுகம்தான்...
உன் அறிவுரைகளை கேட்டுக்கொண்டிருப்பதும்
சுகம்தான்...
உனது கட்டளைகளை கடைப்பிடிப்பதும்
சுகம்தான்...
நீ என்னை கேலி செய்வதும் 
சுகம்தான்...
உனக்காக...
என் ஆசைகள் சிலவற்றை மறைப்பதும்
சுகம்தான்...
பிடிக்காது எனினும் நீ செய்துவிட்டதால்
சகித்திருப்பதும் சுகம்தான்...
தன்மானம் துறந்து தவறு என் பக்கம்
இல்லையென்றாலும் உன்னிடம்
மன்னிப்புக்கோருவதும் சுகம்தான்...
நீ எனக்கானவள்!
என்பது
உண்மையாய் இருக்கும் வரை...
மட்டுமல்ல..,
"பொய்யாக போனாலும்"

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

Likes... Dislikes...

அவளுக்கு பிடித்த பலவற்றை
செய்யும் நான்...
பிடிக்காத ஒன்றையும் செய்கிறேன்
"காதலிப்பது" 

Joke

Teacher: நீ பெரியவனாகி என்ன பண்ண போற?

Boy: கல்யாணம்…

Teacher: அது இல்ல நீ என்னாவா ஆகா விரும்புற?

Boy: Husband …

Teacher: No I Mean உனக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்கணும்’னு எதிர் பாக்குற?

Boy: Wife…

Teacher: Oh No உங்க Parents’கு என்ன பண்ண போற?

Boy: மருமகள் தேடுவேன்…

Teacher: Stupid, உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்க்கிறார்?

Boy: பேர குழந்தை…

Teacher: அய்யோ கடவுளே!! டேய், உன் வாழ்க்கை லட்சியம் என்ன?

Boy: நாம் இருவர்!!! நமக்கு இருவர்!!!

வியாழன், 8 செப்டம்பர், 2011

Eggy Eye Joke

உனது முட்டை கண்களை பற்றி கவிதை எழுத கண்களை மூடினேன்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

Sorry அப்படியே தூங்கிட்டேன்... இப்போ தான் எழுந்திரிச்சேன்... Anyway Have A Nice Day...

Good Morning

அயல் நாட்டில் கொடி கட்டும்,
தமிழ் மறவாத மலேசியா பெண்ணே...
குமரியாக இருந்தும் குழந்தை,
குணம் கொண்ட முட்டை கண்ணே...
குரல் கேளாமல் பேசிய நங்கையே,
இணையம் வழியாக தெரிந்த மங்கையே,
இனிய காலை  வணக்கம்...
இன்றைய பொழுது இனிதே கழியட்டும்...

Don't Make Me A Poet

காதலிக்கும் ஆட்கள் போலே,
கவிஞர்கள் கிடையாது...
இருந்தாலும்,
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்,
பெண்ணே,
என்னையும் கவிஞன் ஆக்காதே...

Reality

உருவத்தில் நீ எப்படி இருந்தாலும், 
இவ்வுலகமே உன்னை நேசிக்கிறது... 
காரணம், 
உள்ளத்தில் நீ ஒரு,
குழந்தை...

There Is No Girl Like You

பலமுறை யோசித்தேன்
உன்னிடம் எப்படி
விழுந்தேன் என்று
ஒருமுறை கூட 
தெரிந்து கொள்ள
முடியவில்லை
பல பெண்களை
பார்த்து விட்டேன்
உன்னை போல்
ஒரு பெண் இல்லை

Failure

தோல்வி காதலில் மட்டுமா? உன்னை மறக்க நினைத்தாலும் தான்... 

Girl's Love, Boy's Love

பொய் சொல்லாமல் ஆண்கள்,
காதலிப்பது இல்லை...
ஆனால்,
உண்மை சொல்லும்போது,
பெண்கள் காதலால் ஈர்க்கப்படுவதும் இல்லை...

Recommendation

இறைவன் முன் அனைவரும் சமம்,
ஆனால் இங்கேயும் சிபாரிசு கடிதம்,
சிறப்பு அர்ச்சனை சீட்டு...

Toddler' Love Poem

LKG (Kindergarten) பையனின் காதல் கவிதை:
நீ பார்க்கும் பார்வையும்,
சிரிக்கும் சிரிப்பும்,
நீ என்னை காதலிக்கிறாய் என்பது புரிகிறது...
வேண்டாம் பெண்ணே...
மீசை கூட முளைக்காத வயதில்,
என்னால் தாடி வளர்க்க முடியாது...

With You


'உன்னோடு' இருப்பதற்கும்
'உன் நினைவோடு' இருப்பதற்கும் 
சிறு வித்தியாசம்தான்... 
உன்னோடு இருப்பது 
"வரம்"
உன் நினைவோடு இருப்பது
"தவம்".... 

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

Touch


அவள் அனுமதி இல்லாமல்,
அவளை தொடுவேன்...
அவள் கண்ணீரை துடைக்க மட்டும்...

Get Well Soon

பிரம்மன் Over-Time எடுத்து செய்த சிலையே, 
சௌக்கியமா?
உனது Silicone இதயம் நன்றாக,
இயங்குகிறதா?
உன்னிடமிருந்து Fever விரட்டப்பட்டு விட்டதா,
என்று நொடிக்கொருதரம் நினைக்கிறேன்,
கேட்க துடிக்கிறேன்...
சொல்லவும் முடியல...
மெல்லவும் முடியல...
இருந்தாலும் கூறி விடைப்பெறுகிறேன்...
இரவு வணக்கம்...
குணமடைந்து மீண்டும் Facebook'ல் உன் தரிசனம்,
தொடரட்டும்...
உன் வரவு நல்வரவாகட்டும்...


சனி, 27 ஆகஸ்ட், 2011

Jealous

எனக்கும் பூக்களுக்கும்  கூட உன் மேல் பொறாமைத்தான்,
பூக்களை  விட அழகான புன்னகையைச் சிந்துகிறாயே...
பிரம்மித்தேன், பிரம்மிக்கிறேன், பிரம்மிப்பேன்...

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

Jokes

காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க? அவங்க 'மெய்'மறந்து காதலிக்கிறவங்களாச்சே!

Jokes

வடிவேலு : ஹலோ என்ன இது? 601 ரூபாய் கடன் வாங்கிட்டு 106 ரூபாய் தரீங்க???
பார்த்திபன் : இதற்கு பெயர்தான் கடனை திருப்பி தர்றது.......

Jokes

எவர் சில்வர் பாத்திர கடையிலே வேலைக்கு சேர்ந்தா முதலாளிகிட்டே எப்படி நடந்துக்கணும்? அவரோட நம்பிக்கைக்கு பாத்திரமா இருக்கணும்...


Kavithai...


முன்பு தனிமையில் தூங்காமல் கவிதை எழுதுவேன்....
உனை கண்டபின் கனவில் கூட கவிதை எழுதுகிறேன்...

Nila...


உன் முட்டை விழிகளை பார்த்தபின் தான் தெரிந்தது...
வெள்ளை நிலாக்களும் கறுப்பு வண்ணத்தில் உண்டு என்று....  

Eggy Eyes...

இன்று முதல் நானும் ஒரு அடிமைதான்,
அடிமையாகி விட்டேன்,
உனது முட்டை கண்களுக்கு...

கண்ணுக்கு மை அழகு,
கவிதைக்கு பொய் அழகு,
கல்பனாவுக்கு முட்டை கண்கள் அழகு,
அதைவிட வேறு எது அழகு?

Paasam...




பாசம் வைத்தபோது வந்தது பாவம்,
பழகி பிரிந்தபோது வந்தது சோகம்.
மனம் இனித்தது உன்னை நினைத்தபோது,
நெஞ்சம் வலித்தது உன்னை காணாதபோது.
மருந்தில்லா காயம் மனதிற்குள்,
மறக்க முடியாத துயரம் நெஞ்சுக்குள்.
கண்கள் காணாத தூரத்தில் நீயும்,
கண்டது கனவென்று அறியாத நானும்,
பாசத்தில் முழ்கியதால் வந்தது துன்பம்!

Innoru Thaai...

செய்யும் பிழையில்,
கடிந்து கொண்டதில்,
புரிந்துக்கொண்டேன்...
துக்க தருணத்தில்,
ஆறுதல் அரவணைப்பில்,
தெரிந்துக்கொண்டேன்...
என்னவளே,
நீயும் எனக்கு இன்னொரு தாய்தான்...

Kobam...

எவ்வளவு கோபம் வந்தாலும், தோற்று போகிறேன்!!!
காரணம் மெய் மறந்து போகிறேன்,
உன் அழகான குறும்பில் மற்றும் உன் குழந்தை சிரிப்பில்...

புதன், 15 ஜூன், 2011

Un Kanngal...

என் கண்களும் கவி பாடியது,
உன் கண்களை கண்ட பிறகு...

இறைவன் படைத்த அழகான
அபாயமான ஆயுதம்
உன் கண்கள்...

செவ்வாய், 14 ஜூன், 2011

Samarppikkiren...

குறும்புத்தனமும் குழந்தைத்தனமும் அடங்கிய அழகிய ஓவியம் நீ,
அதில் மெய்மறந்து போகும் உனது தீவிர ரசிகன் நான்,
மகிழ்ச்சியையும் சிரிப்பொலியையும் பரப்பும் அற்புத பிறவி நீ,
எனது கோடி நன்றிகளை உன்னிடம் சமர்ப்பிக்கிறேன் நான்...

Unathu Isparisam...

உன் பெயரும் தெரியாது, 
உன் முகவரியும் தெரியாது,
உன் வயதும் தெரியாது,
உன் முகமும் தெரியாது,
உன் வாசனையும் தெரியாது,
உன் ஓசையும் தெரியாது,
ஆனால் எனக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்,
என்னுள் தீண்டிய உனது ஸ்பரிசம்...

திங்கள், 13 ஜூன், 2011

Un Kanngal...

உன்னை பார்த்து பேச வந்து, 
உன் கண்ணை பார்த்து பேசி, 
உளறுகிறேன்!

முட்டை கண்ணே,
உன் கூரிய விழிகளால் என்னை பார்க்காதே,
அவை பார்வைகள் அல்ல, 
என்னை தாக்கும் மின்சாரங்கள்...

En Penne...

Cleopatraவின் Structure, தமிழ் பெண்ணின் Culture,
உன்னிடம் பார்த்தேனடி.

Eggy கண்ணே,
Apple பெண்ணே,
என்னை எப்போது பார்ப்பாயாடி...

சனி, 4 ஜூன், 2011

Kalli Sirukki…

என் இதய திருடியே,
உன் அடாவடி காதல் என்னை கொல்கிறதே.
சந்தனத்தின் நிறம் போல,
மறந்தும் பிரியாத உறவை நாடி துடிக்கிறதே.
வெறும் கவிதை காதலனான நான்,
இன்று உன் கலாபக் காதலனானேன் .
இன்று முதல் நீதானடி,
இந்த கள்வனின் காதலி.

என் கவிதை புயலே,
உன் அதிரடி காதல் என்னை தாக்குகிறதே.
குங்குமத்தின் நிறம் போல,
சிவந்தும் மாறாத உறவை நாடி துடிக்கிறதே.
வெறும் கனவு நாயகனான நான்,
இன்று உன் நவரச நாயகனானேன்.
இன்று முதல் நீதானடி,
எந்தன் பிரியமான தோழி.

English Tamil Mix Poem

Computer Graphics கிளியே,
உன்னை Capture செய்த என் Cameraவுக்கு உன் நன்றி தேவையில்லையே.
பிரம்மன் செதுக்கிய சிற்பமே ,
அவர் பயன்படுத்திய Adobeக்கு உன் கைகள் சலாம் போடுமே.
Singing குயிலே,
உன் பாடலை Composing செய்த எனக்கு உன் முத்தங்கள் போதுமே.
Nile நதியே,
உன் Gorgeous முகத்தை நோக்க என் இரு கண்கள் போதவில்லையே.
முகபுத்தகமே,
என் Wall Fullஆ அலங்கரிப்பது உன் Wall Postடே...

Kathavum Arintha Uravu…

காதலியே…
மூடிக்கிடந்த
என் வீட்டுக்கதவு
காற்று  அடிக்காமலே
திறந்து கொண்டது!
வெளியே எட்டி
பார்த்தேன்…
என் வீட்டை
கடந்து கொண்டிருந்தாய் நீ!

Ninaitthathu Ondru, Nadanthathu Ondru…

நல்லதொரு
கவிதை எழுதலாம்
என்று…
மேசை மீது வைத்தேன்,
எழுதுகோலையும்
நிமிர்த்திவிட்டேன்…
பூர்த்தி செய்துவிட்டது
‘அவள்’ நிழல்!

Maname…

இதயமே…
நீ துடிக்கும் நிமிடங்களில்
நினைவுகள் ரணமாய் வலிக்கிறது!
ஒவ்வொரு இரவு நித்திரையிலும்
கண்ணீர் ஆகுது ஞாபகங்கள்!
மனமே…
ஆறுதல் அடைந்துவிடு,
நான் வாழ வேண்டும்
எதிர்காலம் எனும் நம்பிக்கையில்!

Slience

மௌனம்கூட ஒரு மொழிதான்... உணரும்போது...

Feelings

உன் புன்னகையை நான் Scan செய்யவா,
அதை Print பண்ணவா,
அதை Upload செய்து உனக்கு E-Mailல்  அனுப்பவா.

உன் அழுகையை நான் Capture செய்யவா,
அதை Convert செய்யவா,
அதை Transfer செய்து உனக்கு Bluetooth பண்ணவா.

உன் கோபத்தை நான் Video எடுக்கவா,
அதை Record பண்ணவா,
அதை Audio செய்து உனக்கு Ringtoneஆய்  அனுப்பவா. 

உன் சோகத்தை நான் Edit செய்யவா,
அதை Download பண்ணவா,
அதை உனக்கு அனுப்பாமலே நான் Delete பண்ணவா.

உன் Feelingசை  வர்ணித்த எனக்கு உன் Lifeஐ தருவியா,
உன் lifeஐ தராவிட்டால் என்னை உன் Life Partnerஆய் ஆக்குவாயா.