ஒளிக்கை நீட்டி வாழ்க்கை,
காட்டிய வசந்த நாள்,
நீ பிறந்த நாள்...
மெய்யாக இந்நாள்,
உன் பிறந்த நாள் அல்ல,
இந்த பூமிக்கு ஒரு தேவதை,
வந்த இனிய நாள்...
ஆனால் எனக்கு மட்டும் ஏனடா...
இன்னும் நீ குழந்தையாகவே தெரிகின்றாய்...
உனது ஜனனம்,
உன் பெற்றோருக்கு மகிழ்ச்சி பொங்கும் தருணம்,
மனதில் குதூகலம்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
எனது அன்புக்குரிய அழகான ராட்ஷசி...
மென்மேலும் இன்பம் பெருகட்டும்...
உனது சுட்டித்தனம் தொடரட்டும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக