திங்கள், 11 பிப்ரவரி, 2013

கறுப்பாக இருப்பதால் தானே,
வெறுப்பாக பார்க்கிறாய்,
தெரிந்து கொள்...

சிவப்பாக இருப்பவர்கள்,
எல்லாம்,
சிறப்பானவர்கள் அல்ல...
எதிரே பார்த்து நடக்கும் மக்களை விட...
என்னை அண்ணாந்து பார்த்து நடக்கும் மக்களே அதிகம்...
நீயோ என் விளிம்பில் மட்டும் தீ வைக்கிறாய்,
நானோ உனக்கு தெரியாமல் -
உன் உயிருக்கே தீ வைக்கிறேன்...
பல முட்டாள்கள் சேர்ந்து நடத்துவதுதான் ஜனநாயகம் என்றால், அதைவிட ஒரு புத்திசாலியின் சர்வதிகாரம் மேல்...
அடுத்த நூற்றாண்டு,
கணவன் முகம் மனைவிக்கு மறந்து போகும்,
மனைவி முகம் கணவனுக்கு மறந்து போகும்,
கணினியுடன் குடும்பம் நடத்துவார்கள்...
இயந்திரத்தோடு மனிதன் இருந்து இருந்து,
மனிதனே இயந்திரமாகிருப்பான்...
சினிமா காட்சி என்றால்கூட
சீட்டின் நுனியில் அமர்ந்து பார்ப்பீர்!
சீரியல் கருமம் என்றால்கூட - மூக்கை
சிந்தியபடியே கண்ணீர் விடுவீர்!
இயந்திரத்தோடு பழகி பழகி
இதயம் இரும்பாகி போனீர்!
உடை பார்த்து, உணவு பார்த்து
பணம் பார்த்து, பொருள் பார்த்து
பழக்கமதில் ஒன்றிணைந்து
பறப்பதல்ல காதல்

காதல் என்ற பொய்மொழியை
கண்களாலே தினமும் பேசி
சாகாமல் ஆண்களைச் சாகடித்து
சாதிப்பதில் இல்லை காதல்

கணவனாக வேறொருவன் கரம்பிடித்து
காதலனின் மனம் மிதித்து
கடைசிவரை நோகடித்து
சோதிப்பதில் இல்லை காதல்

சேலை மாற்றும் பழக்கம் விட்டு - மாறாய்
ஆளை மாற்றும் பழக்கம் தொட்டு
நாளைக் கழித்து நலமாய் வாழ
நடிப்பதில் இல்லை காதல் 

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

வாழ்க்கையில் வசதியாய் வாழ வேண்டி
வசந்த பயணம் நானும் செய்தேன்...

பிறந்த காலம் முதல் - நான்
பிரிந்ததில்லை என் தாய் தந்தையை
சிறந்து வாழ வேண்டுமானால் - பிரிவை
மறந்து தானே இருக்க வேண்டும்...

(ஒரு கவிஞரின் படைப்பில் படித்தது; அனுபவித்து கொண்டிருப்பது)

ஞாயிறு, 13 மே, 2012

Drunker's Poem

குடிகாரனின் கவிதை...

சரக்கை உறிஞ்சினேன்,
சர்ரென்று அழிந்தன,
அவளின் நினைவுகள்...

Happy Married Life Sneha

ஆண்களுக்கான துக்க தினம்,
புன்னகை இளவரசியின் திருமணம்,
வாழ்த்தி பாட சொல்லுதே என் மனம்,
"எங்கிருந்தாலும் வாழ்க" என்று ஒரு கணம்...

Movie Jokes

"அந்த திரைக்கதாசிரியர் தன் பையனை ஏன் திட்டுறாரு?"

"பரிட்சை சரியா எழுதாம, வீட்டுக்கு வந்து, 'பரிட்சையில் சொதப்புவது எப்படி?'னு திரைக்கதை எழுதிக்கிட்டிருக்கிறானாம்!"

Tamil Jokes

"நாம பார்க்கப் போறதா இருந்த பொண்ணு ஓடிப் போயிட்டளாம்!"

"பஜ்ஜி போச்சே!"

Happy

நெடுநாளாய் தேடிய பொருள் கண்ணில் பட்டதால் முகத்தில் பூக்கள் !
பேரம் பேசாமல் வாங்கியதால் விற்றவள் முகத்திலும் பூக்கள் !

வியாழன், 19 ஏப்ரல், 2012

Pleasure

காத்திருக்கிறேன்
விடியலுக்காக
ஏட்டில்
மட்டுமல்ல
வாழ்விலும்
வசந்தம்
வரட்டும்
என்பதற்காக!!!

Name

உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும் வரை
நான் உணர்ந்ததில்லை
எனது பெயர்
இத்தனை அழகாய்
இருக்கிறது என்று...

Prize For Love

நாளிதழில் செய்தி !!
காதலித்தற்காக கிடைத்த பரிசுகள்...
காதலித்தவனுக்கு கிடைத்தது,
அரிவாள் வெட்டு...!
சமரசம் செய்தவனுக்கு,
மண்டை பிளந்தது...!

Blue

நீலம் காமமாக தோன்றவில்லை,
கவிதையாக தோன்றுகிறது...
உனது நீலப்புடவையின்,
தரிசனம் கண்டு...

Language

அன்று,
எனது காதலுக்காக,
உனது தாய் மொழியை கற்றேன்...
இன்று,
உனது தாய் மொழி,
எனது நாவில் உண்டு...
எனது காதல்,
உனது இதயத்தில் இல்லை...

வியாழன், 15 மார்ச், 2012

English Movies if translated in Tamil


English Movies if translated in Tamil...

Mummy Returns: Aatha Thirumbi Vanthuttaa/ஆத்தா திரும்பி வந்துட்டா
Wanted: Vendiyathu/வேண்டியது
Batman Begins: Vavvaal Manithanin Aarambam/வௌவால் மனிதனின் ஆரம்பம்
Catwoman: Pen Poonai/பெண் பூனை
Lord of the Rings: Mothiranggalin Kadavul/மோதிரங்களின் கடவுள்
The Scorpion King: Thel Raja/தேள் ராஜா
Ice Age: Panikkatti Vayasu/பனிக்கட்டி வயசு
Ghost Hunters: Pei Vettaiyar/பேய் வேட்டையர் 
Johnny English: Aanggila Johnny/ஆங்கில ஜானி
Finding Nemo: Nemo'vai Thedi/நீமோ'வை தேடி
Die Another Day: Innoru Naal Saavu/இன்னொரு நாள் சாவு
The Day After Tommorrow: Naalai Maru Naal/நாளை மறு நாள்
Hellboy: Naraga Paiyan/நரக பையன்
Ghost Rider: Pei Ottunar/பேய் ஓட்டுநர்
Resident Evil: Theeya Kudil/தீய குடில்
X-Men: X-Aambalaigal/X-ஆம்பளைகள்
Exorcism of Emily Rose: Emily Roja'kku Pei Otta/எமிலி ரோஜாக்கு பேய் ஓட்ட 

Taj Mahal Message


தாஜ்மஹால் சொல்லும் Message என்ன?
செத்தும் செலவு வைப்பாள் காதலி!