திங்கள், 11 பிப்ரவரி, 2013

கறுப்பாக இருப்பதால் தானே,
வெறுப்பாக பார்க்கிறாய்,
தெரிந்து கொள்...

சிவப்பாக இருப்பவர்கள்,
எல்லாம்,
சிறப்பானவர்கள் அல்ல...
எதிரே பார்த்து நடக்கும் மக்களை விட...
என்னை அண்ணாந்து பார்த்து நடக்கும் மக்களே அதிகம்...
நீயோ என் விளிம்பில் மட்டும் தீ வைக்கிறாய்,
நானோ உனக்கு தெரியாமல் -
உன் உயிருக்கே தீ வைக்கிறேன்...
பல முட்டாள்கள் சேர்ந்து நடத்துவதுதான் ஜனநாயகம் என்றால், அதைவிட ஒரு புத்திசாலியின் சர்வதிகாரம் மேல்...
அடுத்த நூற்றாண்டு,
கணவன் முகம் மனைவிக்கு மறந்து போகும்,
மனைவி முகம் கணவனுக்கு மறந்து போகும்,
கணினியுடன் குடும்பம் நடத்துவார்கள்...
இயந்திரத்தோடு மனிதன் இருந்து இருந்து,
மனிதனே இயந்திரமாகிருப்பான்...
சினிமா காட்சி என்றால்கூட
சீட்டின் நுனியில் அமர்ந்து பார்ப்பீர்!
சீரியல் கருமம் என்றால்கூட - மூக்கை
சிந்தியபடியே கண்ணீர் விடுவீர்!
இயந்திரத்தோடு பழகி பழகி
இதயம் இரும்பாகி போனீர்!
உடை பார்த்து, உணவு பார்த்து
பணம் பார்த்து, பொருள் பார்த்து
பழக்கமதில் ஒன்றிணைந்து
பறப்பதல்ல காதல்

காதல் என்ற பொய்மொழியை
கண்களாலே தினமும் பேசி
சாகாமல் ஆண்களைச் சாகடித்து
சாதிப்பதில் இல்லை காதல்

கணவனாக வேறொருவன் கரம்பிடித்து
காதலனின் மனம் மிதித்து
கடைசிவரை நோகடித்து
சோதிப்பதில் இல்லை காதல்

சேலை மாற்றும் பழக்கம் விட்டு - மாறாய்
ஆளை மாற்றும் பழக்கம் தொட்டு
நாளைக் கழித்து நலமாய் வாழ
நடிப்பதில் இல்லை காதல்