புதன், 15 ஜூன், 2011

Un Kanngal...

என் கண்களும் கவி பாடியது,
உன் கண்களை கண்ட பிறகு...

இறைவன் படைத்த அழகான
அபாயமான ஆயுதம்
உன் கண்கள்...

செவ்வாய், 14 ஜூன், 2011

Samarppikkiren...

குறும்புத்தனமும் குழந்தைத்தனமும் அடங்கிய அழகிய ஓவியம் நீ,
அதில் மெய்மறந்து போகும் உனது தீவிர ரசிகன் நான்,
மகிழ்ச்சியையும் சிரிப்பொலியையும் பரப்பும் அற்புத பிறவி நீ,
எனது கோடி நன்றிகளை உன்னிடம் சமர்ப்பிக்கிறேன் நான்...

Unathu Isparisam...

உன் பெயரும் தெரியாது, 
உன் முகவரியும் தெரியாது,
உன் வயதும் தெரியாது,
உன் முகமும் தெரியாது,
உன் வாசனையும் தெரியாது,
உன் ஓசையும் தெரியாது,
ஆனால் எனக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்,
என்னுள் தீண்டிய உனது ஸ்பரிசம்...

திங்கள், 13 ஜூன், 2011

Un Kanngal...

உன்னை பார்த்து பேச வந்து, 
உன் கண்ணை பார்த்து பேசி, 
உளறுகிறேன்!

முட்டை கண்ணே,
உன் கூரிய விழிகளால் என்னை பார்க்காதே,
அவை பார்வைகள் அல்ல, 
என்னை தாக்கும் மின்சாரங்கள்...

En Penne...

Cleopatraவின் Structure, தமிழ் பெண்ணின் Culture,
உன்னிடம் பார்த்தேனடி.

Eggy கண்ணே,
Apple பெண்ணே,
என்னை எப்போது பார்ப்பாயாடி...

சனி, 4 ஜூன், 2011

Kalli Sirukki…

என் இதய திருடியே,
உன் அடாவடி காதல் என்னை கொல்கிறதே.
சந்தனத்தின் நிறம் போல,
மறந்தும் பிரியாத உறவை நாடி துடிக்கிறதே.
வெறும் கவிதை காதலனான நான்,
இன்று உன் கலாபக் காதலனானேன் .
இன்று முதல் நீதானடி,
இந்த கள்வனின் காதலி.

என் கவிதை புயலே,
உன் அதிரடி காதல் என்னை தாக்குகிறதே.
குங்குமத்தின் நிறம் போல,
சிவந்தும் மாறாத உறவை நாடி துடிக்கிறதே.
வெறும் கனவு நாயகனான நான்,
இன்று உன் நவரச நாயகனானேன்.
இன்று முதல் நீதானடி,
எந்தன் பிரியமான தோழி.

English Tamil Mix Poem

Computer Graphics கிளியே,
உன்னை Capture செய்த என் Cameraவுக்கு உன் நன்றி தேவையில்லையே.
பிரம்மன் செதுக்கிய சிற்பமே ,
அவர் பயன்படுத்திய Adobeக்கு உன் கைகள் சலாம் போடுமே.
Singing குயிலே,
உன் பாடலை Composing செய்த எனக்கு உன் முத்தங்கள் போதுமே.
Nile நதியே,
உன் Gorgeous முகத்தை நோக்க என் இரு கண்கள் போதவில்லையே.
முகபுத்தகமே,
என் Wall Fullஆ அலங்கரிப்பது உன் Wall Postடே...

Kathavum Arintha Uravu…

காதலியே…
மூடிக்கிடந்த
என் வீட்டுக்கதவு
காற்று  அடிக்காமலே
திறந்து கொண்டது!
வெளியே எட்டி
பார்த்தேன்…
என் வீட்டை
கடந்து கொண்டிருந்தாய் நீ!

Ninaitthathu Ondru, Nadanthathu Ondru…

நல்லதொரு
கவிதை எழுதலாம்
என்று…
மேசை மீது வைத்தேன்,
எழுதுகோலையும்
நிமிர்த்திவிட்டேன்…
பூர்த்தி செய்துவிட்டது
‘அவள்’ நிழல்!

Maname…

இதயமே…
நீ துடிக்கும் நிமிடங்களில்
நினைவுகள் ரணமாய் வலிக்கிறது!
ஒவ்வொரு இரவு நித்திரையிலும்
கண்ணீர் ஆகுது ஞாபகங்கள்!
மனமே…
ஆறுதல் அடைந்துவிடு,
நான் வாழ வேண்டும்
எதிர்காலம் எனும் நம்பிக்கையில்!

Slience

மௌனம்கூட ஒரு மொழிதான்... உணரும்போது...

Feelings

உன் புன்னகையை நான் Scan செய்யவா,
அதை Print பண்ணவா,
அதை Upload செய்து உனக்கு E-Mailல்  அனுப்பவா.

உன் அழுகையை நான் Capture செய்யவா,
அதை Convert செய்யவா,
அதை Transfer செய்து உனக்கு Bluetooth பண்ணவா.

உன் கோபத்தை நான் Video எடுக்கவா,
அதை Record பண்ணவா,
அதை Audio செய்து உனக்கு Ringtoneஆய்  அனுப்பவா. 

உன் சோகத்தை நான் Edit செய்யவா,
அதை Download பண்ணவா,
அதை உனக்கு அனுப்பாமலே நான் Delete பண்ணவா.

உன் Feelingசை  வர்ணித்த எனக்கு உன் Lifeஐ தருவியா,
உன் lifeஐ தராவிட்டால் என்னை உன் Life Partnerஆய் ஆக்குவாயா.