வியாழன், 19 ஏப்ரல், 2012

Pleasure

காத்திருக்கிறேன்
விடியலுக்காக
ஏட்டில்
மட்டுமல்ல
வாழ்விலும்
வசந்தம்
வரட்டும்
என்பதற்காக!!!

Name

உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும் வரை
நான் உணர்ந்ததில்லை
எனது பெயர்
இத்தனை அழகாய்
இருக்கிறது என்று...

Prize For Love

நாளிதழில் செய்தி !!
காதலித்தற்காக கிடைத்த பரிசுகள்...
காதலித்தவனுக்கு கிடைத்தது,
அரிவாள் வெட்டு...!
சமரசம் செய்தவனுக்கு,
மண்டை பிளந்தது...!

Blue

நீலம் காமமாக தோன்றவில்லை,
கவிதையாக தோன்றுகிறது...
உனது நீலப்புடவையின்,
தரிசனம் கண்டு...

Language

அன்று,
எனது காதலுக்காக,
உனது தாய் மொழியை கற்றேன்...
இன்று,
உனது தாய் மொழி,
எனது நாவில் உண்டு...
எனது காதல்,
உனது இதயத்தில் இல்லை...