செவ்வாய், 20 செப்டம்பர், 2011

Likes... Dislikes...

அவளுக்கு பிடித்த பலவற்றை
செய்யும் நான்...
பிடிக்காத ஒன்றையும் செய்கிறேன்
"காதலிப்பது" 

Joke

Teacher: நீ பெரியவனாகி என்ன பண்ண போற?

Boy: கல்யாணம்…

Teacher: அது இல்ல நீ என்னாவா ஆகா விரும்புற?

Boy: Husband …

Teacher: No I Mean உனக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்கணும்’னு எதிர் பாக்குற?

Boy: Wife…

Teacher: Oh No உங்க Parents’கு என்ன பண்ண போற?

Boy: மருமகள் தேடுவேன்…

Teacher: Stupid, உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்க்கிறார்?

Boy: பேர குழந்தை…

Teacher: அய்யோ கடவுளே!! டேய், உன் வாழ்க்கை லட்சியம் என்ன?

Boy: நாம் இருவர்!!! நமக்கு இருவர்!!!

வியாழன், 8 செப்டம்பர், 2011

Eggy Eye Joke

உனது முட்டை கண்களை பற்றி கவிதை எழுத கண்களை மூடினேன்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

Sorry அப்படியே தூங்கிட்டேன்... இப்போ தான் எழுந்திரிச்சேன்... Anyway Have A Nice Day...

Good Morning

அயல் நாட்டில் கொடி கட்டும்,
தமிழ் மறவாத மலேசியா பெண்ணே...
குமரியாக இருந்தும் குழந்தை,
குணம் கொண்ட முட்டை கண்ணே...
குரல் கேளாமல் பேசிய நங்கையே,
இணையம் வழியாக தெரிந்த மங்கையே,
இனிய காலை  வணக்கம்...
இன்றைய பொழுது இனிதே கழியட்டும்...

Don't Make Me A Poet

காதலிக்கும் ஆட்கள் போலே,
கவிஞர்கள் கிடையாது...
இருந்தாலும்,
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்,
பெண்ணே,
என்னையும் கவிஞன் ஆக்காதே...

Reality

உருவத்தில் நீ எப்படி இருந்தாலும், 
இவ்வுலகமே உன்னை நேசிக்கிறது... 
காரணம், 
உள்ளத்தில் நீ ஒரு,
குழந்தை...

There Is No Girl Like You

பலமுறை யோசித்தேன்
உன்னிடம் எப்படி
விழுந்தேன் என்று
ஒருமுறை கூட 
தெரிந்து கொள்ள
முடியவில்லை
பல பெண்களை
பார்த்து விட்டேன்
உன்னை போல்
ஒரு பெண் இல்லை

Failure

தோல்வி காதலில் மட்டுமா? உன்னை மறக்க நினைத்தாலும் தான்... 

Girl's Love, Boy's Love

பொய் சொல்லாமல் ஆண்கள்,
காதலிப்பது இல்லை...
ஆனால்,
உண்மை சொல்லும்போது,
பெண்கள் காதலால் ஈர்க்கப்படுவதும் இல்லை...

Recommendation

இறைவன் முன் அனைவரும் சமம்,
ஆனால் இங்கேயும் சிபாரிசு கடிதம்,
சிறப்பு அர்ச்சனை சீட்டு...

Toddler' Love Poem

LKG (Kindergarten) பையனின் காதல் கவிதை:
நீ பார்க்கும் பார்வையும்,
சிரிக்கும் சிரிப்பும்,
நீ என்னை காதலிக்கிறாய் என்பது புரிகிறது...
வேண்டாம் பெண்ணே...
மீசை கூட முளைக்காத வயதில்,
என்னால் தாடி வளர்க்க முடியாது...

With You


'உன்னோடு' இருப்பதற்கும்
'உன் நினைவோடு' இருப்பதற்கும் 
சிறு வித்தியாசம்தான்... 
உன்னோடு இருப்பது 
"வரம்"
உன் நினைவோடு இருப்பது
"தவம்"....